383 மன்றங்கள் உள்ள ஒவ்வொரு ரெவின்யு மாவட்டத்திலும் மேற்படி மன்றங்களின் கூட்டம் மேலே குறிப்பிட்ட மாதங் களில்தான் நடைபெற வேண்டும். கூட்டத்தின் தேதியைக் கலெக்டர் நிச்சயிக்க வேண்டும். இது சாதாரணமாக, மேற் சொன்ன மாதங்களின் 21-ம் தேதிக்கும், மாதங்களின் கடைசித் தினத்துக்கும் இடையிலுள்ள தேதியாகவே இருக்க வேண்டும். 5. சாதாரண பொதுக்கூட்டங்கள்-பஞ்சாயத்து யூனி யன் மன்றங்கள்:-பஞ்சாயத்து யூனியன் மன்றம், நிச்ச யிக்கக் கூறிய காலங்களில் சபை கூடவேண்டும் என்றும், அதன் இரண்டு கூட்டங்களுக்கு இடையில் அறுபது தினங் களுக்கு மேற்பட்ட இடைவெளி இருத்தலாகாது என்றும் பஞ்சாயத்துச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பஞ்சாயத்து யூனியனுக்கு பஞ்சாயத்துச் சட்டத்தின் 66-வது பிரிவின்கீழ் பெரும் பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனும் மாதம் ஒரு முறை கூட வேண்டும் என அரசாங்கத்தினர் கருதுகின்றனர். கூட்டத் தின் தேதியை மன்றத் ಅಶ್ವಿಖ6ು! நிச்சயிப்பார். ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் மன்றத் தலைவரும் மாவட்ட அபி விருத்தி மன்றக் கூட்டத்திற்கு வந்து தமது வட்டாரத்தில் நிறைவேற்றப்படும் பணிகளின் முன்னேற்றத்தைப் பற்றியும், பல்வேறு வேலேத் திட்டங்களே நிறைவேற்றுவதில் ஏற்பட்ட இடையூறுகள் பிரச்னேகள் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். மன்றத் தலைவர் மேற்சொன்ன பணியைத் திறமையுடனும் பயன் விளேயும் வகையிலும் எடுத்துரைக்கும் பொருட்டு, ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் சாதாரணப் பொதுக்கூட்டம் ஒவ்வொன்றும், மாதத்தின் 11-ம் தேதிக்கும் 20-ம் தேதிக்கும் இடையில் நடப்பது நலம் என்று அரசாங்கத்தினர் கருதுகின்றனர். 6. சாதாரண பொதுக் கூட்டங்கள்-பஞ்சாயத்துகள்:பஞ்சாயத்துக் கூட்டங்கள் இன்ன காலங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும் என்ற நிர்ணயம் எதுவும் பஞ்சாயத்துச் சட்டத்தில் இல்லை. ஆனல் விதிகளின்படி, ஒவ்வொரு பஞ்சாயத்தும் மாதம் ஒரு முறை கூட்டம் கூட வேண்டும். பஞ்சாயத்தின் கூட்டமானது, பஞ்சாயத்து யூனியன் மன்றத் தின் கூட்டத்திற்கு முன்னதாகவே கூடினுல் நலம் விளையும். அப்போதுத்ான் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் உள்ள பஞ்சாயத்துப் பிரதிநிதி அந்தப் பஞ்சாயத்தின் கருத்துக்களே அறிந்துகொண்டு அவற்றைப் பஞ்சாயத்து யூனியன் மன்றக்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/869
Appearance