பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பஞ்சாயத்து எல்லைக்குள் இருக்கும் வீடுகளுக் கெல்லாம் அவற்றின் அளவுக்குத் தகுந்தாற் போல் வரிவிதித்து வசூலிக்க வேண்டும். பஞ்சாயத்து எல்லைக்குள் தொழில் செய்கிற ஒவ்வொரு வருக்கும் தொழில் வரி விதிக்க வேண்டும். பஞ்சாயத்துக்குள் இருக்கும் வண்டிகள், இதர வாகனங் களுக்கு லைசென்ஸ் கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பது. பஞ்சாயத்து பிரதேசத்தில் நடக்கும் ஸ்தாவர சொத்து மாற்றத்தின் பேரில் ஒரு சர்சார்ஜ் வரி விதித்து வசூலிக் கலாம். அதாவது, எவ்வளவு ஸ்டாம்பு ஒட்டி மேற்படி பத்திரங்களைப் பதிவு செய்ய வேண்டுமோ அதற்கு மேல் அதிகப்படியான ஒரு வரி. சந்தை வரி, வண்டிப் பேட்டை வரி, கசாப்புக்கடை வரி போன்றவற்றையும் விரும்பினுல் விதிக்கலாம். பஞ்சாயத்து யூனியனுக்கு சர்க்கார் தரும் பல்வேறு மானியங்களிலிருந்தும் பஞ்சாயத்து தனக்குரிய பங்கைப் பெற்றுக் கொள்கிறது. கிராமப் பஞ்சாயத்து வீட்டுவரியாக எவ்வளவு தொகை வசூல் செய்கிறதோ அதற்கு இணையான மான்யம் ஒன்றை அரசாங்கம் பஞ்சாயத்துக்குக் கொடுக்கிறது. 56. கணக்கு எழுதுவது எப்படி? பஞ்சாயத்து கணக்குகளை ஒழுங்காக வைத்துக் கொள்னை வேண்டும் இது நிர்வாக அதிகாரியின் பொறுப்பு ஆகும். அன்ருட வரவு செலவுகளை தேதி வாரியாக குறிப்புப் புத்தகத்தில் பதிய வேண்டும். ஒவ்வொரு மாத முடிவிலும் வரவு இவ்வளவு, செலவு இவ்வள்வு, இருப்பு இவ்வளவு என்று: காட்ட வேண்டும். பாங்கிலிருந்து எடுக்கப்படும் பணத்துக்கு சரியான கணக்கு இருக்க வேண்டும். பட்டுவாடா செய்யும் பணத்துக்கு ரசீது கட்டாயம் இருக்க வேண்டும்.