7 வழக்கு: ே சென்னை உயர்நீதி மன்றம் கனம் நீதிபதி கைலாசம் அவர்கள். அப்பீல்தாரர் : பப்ளிக் பிராசிக்யூட்டர். .பிரதிவாதி : அருள்சாமி. விஷயம் பஞ்சாயத்துச் சட்டம் 106, 127 பிரிவுகள்பஞ்சாயத்துக்கு நம்பிக்கை துரோகம், பொய்க் கணக்கு எழுதுதல் ஆகிய குற்றங்கள் செய்த பஞ்சாயத்து தலைவர்மீது கிரிமினல் வழக்குத் தொடர அரசாங்கத்தின் அனுமதி தேவையா ? வழக்கின் சுருக்கம் அருள்சாமி, கோவை மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை பஞ்சாயத்து தலைவர். 1960-ம் வருஷம் மார்ச் மாதம் 24-ம் தேதி, பஞ்சாயத்து கணக்குகளே பரிசீலிக்கப்பட்டதில், பஞ்சாயத்தின் நிதி ரூ. 26.10.23 இருக்க வேண்டும் என்று தெரியவந்தது. மேலதிகாரி பஞ்சாயத்து தலைவரை வரச் சொன்னபோது அவர் வர மறுத்துவிட்டார். மேற்படி அதிகாரி தனக்கு மேலதிகாரிக்கு ரிப்போர்ட் செய்தார். பிறகு, அவர்களின் உத்தரவுப்படி, துணைத் தலைவர், பஞ்சாயத்து காரியாலய குமாஸ்தா, மற்ருெரு நபர் ஆகியவர்களிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கினர். பஞ்சாயத்து தலைவர் பஞ்சா யத்தின் ரொக்க இருப்பை ஆஜர்படுத்தவில்லே’ என்று அவர் கள் தெரிவித்தனர். தலைவர்மீது கிரிமினல் வழக்கு தொடரப் பட்டது. மேல் அதிகாரி சம்பவ தினத்தன்று. பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து, வாதிச்சிக் கவுண்டர் முன்னிலே யில் ரூ. 2600 ஐ டிரஷரியில் செலுத்தப் போவதாகக் கூறி எடுத்துக்கொண்டு போய்விட்டதாக பிரதிவர்தி சொன்ஞர். மாஜிஸ்டிரேட், தலைவர்மீது நம்பிக்கை மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தார். பொய்க் கணக்கு எழுதிய குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என்று கூறி, அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுதலே செய்தார். அதன்பின், செஷன்ஸ் அப்பீலில், எதிரி ரூ. 2600ஐ கையாடல் செய்தது நிரூபிக்கப்பட்டுவிட்டது
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/886
Appearance