ió வாதங்களே முன்சீப் ஏற்றுக்கொள்ளவில்லே. இதே காரணங் கள் இங்கும் வலியுறுத்தப்படுகின்றன. குப்புசாமி Ws கார்பொரேஷன் கவுன்ஸில் (1. L. R. 1964. Madras14 என்ற வழக்கில், கூட்டத்துக்கு வராமல் தகுதி இழந்த அங்கத்தினர் பற்றிய ரிப்போர்ட்டை கமிஷனர் தாக்கல் செய்தால்தான், நகர முனிஸியல் சட்டம் 5.8 (4) பிரிவின்கீழ் கவுன்லில் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற வாதம் கோர்ட்டாரால் ஏற்கப்படவில்லே. கமிஷனரின் ரிப்போர்ட்டானது கவுன் ஸிலுக்கு தரும் ஒரு சாதாரண தகவலாகவே கருதப்பட்டது. கவுன்சில் தன்னுடைய அதிகாரத்தை உபயோகிக்க அது ஒரு நிபந்தனையாக மதிக்கப்படவில்லே. அந்த வழக்கு, சென்னை நகர முனிஸியல் சட்டத்தின்கீழ் முடிவு செய்யப் பட்டிருந்தபோதிலும் இந்த வழக்குக்கும் அது பொருந்து கிறது. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட காரணம்: மூன்று கூட்டங்களுக்கான அறிவிப்புகள் தமக்கு கொடுக்கப்பட் வில்லை என்பதாகும். முன்சீப் விசாரித்து முடிவு செய்த (சட்டத் தொடர்பு அற்ற) விஷயம். எனவே, ரிட் அதிகாரத் தின்கீழ் அதை மாற்ற முடியாது. பஞ்சாயத்தானது மனுதாரர் தகுதி இழந்ததை பொருட் படுத்தவில்லே என்று கொள்வதற்கு இடமில்லை. ஏனென்ருல், அவ்வாறு செய்யும் அதிகாரம் பஞ்சாயத்துக்கு தரப்பட் வில்லே, 27 (2) பிரிவில், சம்பந்தப்பட்ட தகுதி இழந்த அங்கத்தினர் மீண்டும் அங்கீகரிக்கப்படுவதற்கு மனுச் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிருக்கிறது. அத்தகைய முனுவின்மீதுதான் பஞ்சாயத்தானது அங்கத்தினர்ைமீண்டும் சேர்த்துக் கொள்ள முடியும். அவர் தகுதி இழப்பது என்ப்து உடன் விளையும் செய்கை ஆதலால், அங்கத்தினர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டால் அன்றி அவர், அங்கத்தின்ர் என்ற தகுதியை இழந்துவிடுகிருர். மனு தள்ளுபடி செய்யப்பட்டது. [W. P. No. 1153/64. L. W. 78. 230.]
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/895
Appearance