உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/907

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பிரிவு 178ன்படி அவ்வாறு அனுசரிக்க வேண்டிய விதி களே நிர்ணயிப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக் கிறது. அந்த அதிகாரத்தின்கீழ் வெளியிட்ட அறிவிப்புப்படி தான் அரசாங்கம், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அலுவல கத்தை ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்துக்கு மாற்றி இருக்கிறது. பிரிவு 47ல் மட்டுமே யூனியன் கவுன்சில் கூடும் இடத்தைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. எனவே, அவ்வப் போது அந்த இடத்தை மாற்றுவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் இருக்கிறது. பஞ்சாயத்து யூனியன் எல்லேக்குள் எந்த இடத்தையும் யூனியன் கவுன்சில் கூடும் இடமாக அரசாங்கம் நிர்ணயிக்கலாம். அந்த இடமே பஞ்சாயத்து யூனியன் தலைமை அலுவலக இடமாக இருக்கும். மனு தள்ளுபடி செய்யப்பட்டது. [W.P. No. 264| 62. L. W. 77. 67]