30 அவ்வாறே, வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் அதிகார எல்லேக்கு உட்பட்ட தனியார் மார்க்கெட்டின் கட்டணம் வருஷ வருமானத்தில் 8.2%லிருந்து 15%க்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதை ஆகேஷபித்து, மேற்படி மார்க்கெட்டின் சொந்தக்காரரும் மனு தாக்கல் செய் துள்ளார். - தீர்ப்பின் சாரம் பஞ்சாயத்துச் சட்டம் 100-வது பிரிவின்படி, தனியார் மார்க்கட்டிற்கு லேசென்ஸ் கட்டணம் விதிக்க பஞ்சாயத்து யூனியனுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்தப் பிரிவில், மார்க் கட்டின் வருஷ வருமானத்தில் 15% விகிதத்துக்கு மேற் படாமல் கட்டணம் விதிக்க அதிகாரம் விதிக்கப்பட்டுள்ளது, எனவே, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்கள் விதித்த கட்ட னங்கள் தங்களுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டதால் சட்டப்படி செல்லுபடியாகும் என்று எதிர்தரப்பில் வாதாடப் படுகிறது. ஆல்ை, கட்டண விகிதத்தை அதிகரித்ததற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி, தங்களுடைய எதிர்வாதத் தில் அவர்கள் கூறவில்லே. மேற்படி யூனியன்கள், அந்த மார்க்கட்டுகளேப் பொறுத்த வரையில் கூடுதலாக என்ன தேவைகளேச் செய்து கொடுத்திருக்கின்றன அல்லது மேற்படி மார்க்கட்டுகளுக்கு செய்த சேவையால், யூனியன்களுக்கு கூடுதலாக எவ்வளவு ஏற்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லே. ஆனால், மேற்படி மார்க்கட்டை மேற்பார்வை யிடுகிற, சோதனே செய்கிற அலுவலர்களின் சம்பளத்துக்காக செலவிடப்படும் தொகைகள் 115 அல்லது 1/7 பங்குத் தொகையை லேசென்ஸ் கட்டணமாக விதித் திருப்பதாகக் கூறுகிருர்கள். - - லேசென்ஸ் கட்டணம் விதிப்பதற்கும், வரிவிதிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. வரி என்பது, ஸ்தல அதிகார சபை யானது பொது மக்களிடமிருந்து சட்டத்தின்மூலம் கட்டாய மாகப் பொது சேவைக்காக வசூல் செய்யும் பணமாகும். அது அதிகார சபைகள் செய்யும் ஒரு குறிப்பிட்ட சேவைக்கு ஈடான கட்டணமில்லே, லேசென்ஸ் கட்டணம் என்பது, அரசாங்க அமைப்புகள் தனிப்பட்டவர்களுக்குச் செய்யும் விசேஷ சேவைகளுக்கு ஈடாக வசூலிக்கும் பணமாகும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/909
Appearance