56 ஒரு வருஷத்துக்கு மேற்படாத கால அளவுக்கு அந்தப் பஞ்சாயத்தை ரத்து செய்துவிடலாம். இவ்வாறு உத்தரவிடுமுன், தங்களுடைய சமாதானம் அல்லது ஆட்சேபணைகளைச் சொல்ல சம்பந்தப் பட்ட பஞ்சாயத்துக்குப் போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும். கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் தேதியிலி, பஞ்சாயத்தின் தலைவர், துணைத் தலைவர், அங்கத்தினர்கள் யாவரும் தமது பதவியைக் காலி செய்துவிட்டதாகக் கருதப்படுவார்கள். & கலைக்கப்பட்ட பஞ்சாயத்து மீண்டும் அமைக்கப்படும் வரையுள்ள இடைக்காலத்தில் ஒரு விசேஷ அதிகாரி நியமிக்கப் படுவார். அவர், அதன் நிர்வாகத்தை நடத்தி வருவார். பஞ்சாயத்து தலைவருக்கு உள்ள கடமைகளையும் அவரே செய்து வருவார். ★ ★ ★ இதே முறையில் தமது கடமையைச் சரிவர நிறைவேற்றத் தவறும் அல்லது அதிகார துஷ்பிரயோகம் செய்யும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களையும் சர்க்கார் கலைத்து விடலாம், மாற்றி அமைக்கலாம். ரத்து செய்யலாம். 63. தேர்தலுக்கு நிற்க முடியாதவர்கள் யார்? கிராம முன்சீபுகள், கர்ணம்கள், அரசாங்கச் சிப்பத்திகள், பஞ்சாயத்து யூனியன், நகரசபை முதலிய ஸ்தல ஸ்தாப சிப்பந்திகள், ஊழியர்கள் யாரும் தேர்தலுக்கு நிற்கமுடிய புத்தி ஸ்வாதீனமற்றவர், செவிட்டுஊமை, குஷ்டரோகி, இன்ஸால்வென்ட் (கடனை அடைக்கச் சக்தி அற்றவர்) கொடுத்தவர், தேர்தல் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப் பட்டவர்.இவர்கள் எல்லோரும் தேர்தலுக்கு நிற்க முடியாது. பஞ்சாயத்து சார்பில் ஊதியம் பெறும் வக்கீல்களும், எதிராக வழக்காடும் வக்கீல்களும் தேர்தலுக்கு நிற்க முடியாது. ஒரு எஜமானரும் அவருடைய லே லே க் க ச | ரு ம் ஏககாலத்தில் பஞ்சாயத்து அங்கத்தினர் தேர்தலுக்கு நிற்க முடியாது. -
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/92
Appearance