பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


இவன் என்னமோ இந்தக் கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து சுத்திக் கிட்டுத் திரியுதானாம். இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத பயல்களோடே யெல்லாம் சகவாசம். நம்ம குடும்பத்துக்கு இது அடுக்குமா? எவனெவன் எப்படிப் போனா என்னான்னு கிடக்கிறதை விட்டுட்டு. என்ன அரசியல் வேண்டியிருக்கு, அரசியல்!" என்று ஆத்திரத்தோடு கூறினார் தாதுலிங்க முதலியார்.

தாதுலிங்க முதலியார் இவ்வாறு விஷயத்தைத் தெளிவாக்கிய பின்னர்தான் தர்மாம்பாளுக்கு நிம்மதி பிறந்தது; அத்துடன் தன் மகனைப்பற்றி, தான் சந்தேகஸ்பதமான வீண்பழியைத் தவறாகச் சுமத்த நேர்ந்த தன் மனச்சாட்சியையும் கடிந்து கொண்டாள். அதன் காரணமாக, அவளுக்குத் தன் மகன் மீது திடீரென்று ஒரு பெரும் அனுதாப உணர்ச்சி தோன்றியது.

"இவ்வளவுதானா?" என்று ஆசுவாசமாகப் பெருமூச்சுவிட்டாள். தர்மாம்பாள். "நீங்க மட்டும் கூட்டங்களுக்கெல்லாம் போகமலா இருக்கீக! எலெக்சன் காலத்திலே நீங்களும்தானே காரைப் போட்டுக்கிட்டு மேற்கும் கிழக்குமாகத் திரிஞ்சீக. அவன் செய்தது மட்டும் குத்தமாப் போச்சாக்கும்!"

மனைவியின் பேச்சைக் கேட்டு, தாதுலிங்க முதலியாருக்குக் கோபம்தான் பொங்கியது. எனினும் தமது மனைவியிடம் கோபத்தைக் காட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தவராக, "என்ன குத்தமாப் போச்சா? அவன் போறபோக்கிலே,. நான் பண்ணுகிற பிளாக் மார்க்கெட் பிஸினெஸையெல்லாம் சந்தி சிரிக்க வச்சிடுவான் போலிருக்கே?" என்று சலித்துக் கொண்டார்.

"ஆமா, உங்களுக்கும் எதுக்கு இந்த வம்பு? கள்ள மார்க்கெட் பண்ணி நாலுபேர் வயித்திலே அடிச்சா, பணம் சம்பாதிக்கணும்? சங்கரன் கூடத்தான் அன்னிக்கி என்னென்னமோ சொல்லிக்கிட்டிருந்தான், நீங்க கைவசம் இருக்கிற