பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116




அதேபோல் கமலாவும் தன் உள்ளத்திலிருந்து பொங்கிப் பொங்கியெழும் அழுகைக்கு அணை கட்டாமல் கண்ணீரைப் பெருக்குவதன் மூலம் தன் மனப் பாரத்தைக் குறைக்க முயன்று கொண்டிருந்தாள்.


12

"கைத்தறித் துணியை ஆதரியுங்கள்!"

கைத்தறித் துணியை மக்கள் ஆதரிக்க முன்வந்தால் கலி நீங்கி விடும் என்று 'கனம் பிரமுகர்கள்' பல்லவி பாடினார்கள்; மகாத்மா காந்தியடிகளின் பொன்மொழி களைத் தேடிப் பிடித்துச் சொல்லி மகாத்மியங்கள் பாடி னார்கள்; 'ஆதரவு அளியுங்கள்!' என்று கோஷ்டிகான வர்ஷட, பொழிந்தார்கள். பத்திரிகைகள் இந்த ஞானோப தேச தத்துவ நுட்பத்தை விளக்கி, தலையங்கங்கள் எழுதின; 'வள்ளுவர் வழிவந்த தொழிலை வாட விடலாமோ' என்று வக்கணைகள் பேசின; மக்களின் சுதேசிய பக்தியைத் தட்டி எழுப்ப முயன்றன. ஒரு சில திடீர் அபிமானிகள் கைத்தறித் துணி மீது தமக்கு ஏற்பட்ட புதிய மோகத்தைப் புலப்படுத்துவதற்காக, அத்தாட்சிபெற்றகதரைக்கூடத் துறந்துவிட்டு, கைத்தறி உடைகள் தரித்து மினுக்கித் திரிந்தார்கள்; சினிமாக் கொட்டகைகளில் சிலைடுகள் போடப்பட்டன; கலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன; தேசியப் பொருட்காட்சிக்களிலும் மாநாட்டுப்பந்தல்களிலும்கைத்தறி 'எம்போரிய'ங் களைத்திறந்துவைத்துச் சொற்பொழிவாற்றினார்கள்; அந்த எம்போரியங்களின் முன்னால் எலும்பும் தோலுமாய்க் காட்சியளித்துக் கையேந்தி நிற்கும் ஒரு கைத்தறி நெச வாளியின் குடும்பத்தை வர்ண சித்திரமாகத் தீட்டி வைத்து. இவர்களை ஆதரியுங்கள்' என்று ஜிகினா தூவிய பொன்னெழுத்துக்களைப் பொறித்து வைத்து, பொது மக்களின் அனுதாபத்தைக் கவர முயன்றார்கள்; மத்திய