பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269



23

அன்று காலையில் மணி பொழுது விடிவதற்கு முன்பே எழுந்துவிட்டான். முந்திய நாள் இரவில் மட்டுமல்ல, இரண்டு நாட்களாகவே மணி இராப் பகலாய் வேலை செய்தான். இரவில் கூட அவனுக்குத் தூங்க நேரம் கிடைக்கவில்லை; தூங்க நேரம் கிடைத்தாலும் அவனுக்குத் தூக்கத்தைப் பற்றிய நினைவுகூட வருவதில்லை. எப்போதாவது தன்னையும் மீறித் தூக்கவெறி அவனைக் கிறக்கினால், அவன் இருந்த இடத்திலேயே சில நிமிஷம் கோழித்துக்கம் போட்டுச் சமாளித்துக் கொண்டான். இரண்டு நாட்களாக அவன் மனத்தில் நிரப்பி நின்ற ஒரே எண்ணம் பட்டினிப் பட்டாளத்தார் எப்போது வந்து சேர்வார்கள்?" என்பதுதான்.

அவர்கள் வரப்போகும் நாளும் வந்துவிட்டது.

மணியும் அவனோடு ஒத்துழைத்த வேறு சில நெசவாள ஊழியர்களும் பட்டினிப் பட்டாளத்தின் வரவைக் குறித்து நகரெங்கும் விளம்பரப் படுத்தியிருந்தார்கள். நகரின் பிரதான நாற்சந்தி மூலைகளிவெல்லாம் பட்டினிப் பட்டாளத்தின் வரவைத் தெரிவித்து, மக்கள் ஆதரவைக் கோரும் போர்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தன; நகரத்தின் சுவரெங்கிலும் பட்டினிப்பட்டாளத்தினரின் வரவையும் போராட்டத்தையும் ஆதரித்து, போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பிரதான வீதிகளிலெல்லாம் ரோட்டின் மீது 'வருக!' 'வருக!' படைதிரண்டு வரும் பட்டினிப் பட்டாளமே வருக!' என்றெல்லாம் வரவேற்புரைகள் தீட்டப் பெற்றிருந்தன. இந்த விளம்பரங்களையெல்லாம் மணியே கூட நின்று ஒத்துழைத்து நிறைவேற்றினான். நிலவு வெளிச்சம் பால்