பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290


"நான் அப்பவே சொன்னேன். நேரா திருநெல்வேலிக்கு ஒரு ஆளை அனுப்பி, கையோட கூட்டிக்கிட்டு வரணும்னேன். கேட்டாத்தானே?" என்று ஒரு நெசவாளி தமது எரிச்சலை வெளியிட்டார்.

சங்கர். அவர்களது பொறுமையின்மையைக் கண்டு அவர்களுக்குத் தைரியம் கூறினான்."ரயில் தான் வரட்டுமே! எப்படியும் இந்த ரயிலில் வந்துவிடுவார். திருநெல்வேலியிலிருந்து என் நண்பர் அவரைத் தாமே கூட்டிக்கொண்டு வருவதாக எழுதியிருக்கிறார். எப்படியும் இந்த வண்டியில் வந்து விடுவார்கள்!"

அதற்குள் இன்னொரு நெசவாளி பெருமூச்செறிந்து கொண்டே சொன்னார்: "வந்தாவாச்சு, தம்பி இல்லேன்னா, நாமும் இன்னிக்கில் கூட்டம் நடத்தினாப்பிலே தான்; நாளைக்கு நம்ம போராட்டத்தையும் ஆரம்பிச்சாப்போலே தான்!"

அவர்கள் அனைவரும் கிழக்குத் திக்கிலே ரயிலின் கரும்புகை தெரிகிறதா என்று கண்ணை விழித்து விழித்தும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் மனத்தில் இருந்த கவலையெல்லாம் அன்றைய பொதுக் கூட்டம் சிறப்பாக நடந்தேற வேண்டும் என்பதும், மறுநாள் தொடங்கவிருக்கும் போராட்டத்துக்கு எந்தவித விக்கினமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதும் தான்.

சென்ற ஒரு சில மாதங்களுக்குள்ளாக அம்பாசமுத்திரத்திலுள்ள நெசவாளர்களின் நிலைமை பெரிதும் மாறிவிட்டது.

ஏதோ அரைப்பட்டினி குறைப் பட்டினியாகவாவது வாழ்க்கை நடத்துவதற்கு, அவர்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னே நூல் கிடைத்து வந்தது. இப்போது அந்த நிலைமையும் தட்டுக் கெட்டுப் போய் விட்டது. நைஸ் ரக நூலை வாங்கி நெய்து பிழைத்து வந்த நெசவாளி