பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318


'பஞ்சும் பசியும்' என்ற நாவலையும் நான் இதே அசுர வேகத்தில்தான் எழுத நேர்ந்தது. பதிப்பகத்தாருக்குச் சொன்ன தவணைக்குச் சுமார் இருபது தினங்களுக்கு முன்னர்தான் பேனாவை எடுத்தேன். தினசரி குறைந்த பட்சம் ஓர் அத்தியாயம் எழுதுவது என்பது என் திட்டம். அவ்வாறு பதின்மூன்று அத்தியாயங்கள் எழுதி முடித்த பின்னர் மறுநாள் என்னால் பேனாவைத் தொட முடியவில்லை. காரணம் என்ன தெரியுமா? அந்த நாவலின் முற்பகுதியில் கைலாச முதலியார் என்ற கடவுள் பக்தி மிகுந்த நெசவாளி ஒருவர் முதலிடம் பெறுகிறார். பதின் மூன்றாவது அத்தியாயத்தோடு அவருடைய வாழ்வும் முடிகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டு மாண்டு விடுகிறார். அவரைச் சாகடித்து விட்டு, மறுதினமே என்னால் கதையை நடத்திச் செல்ல முடியவில்லை. அவருக்காக மூன்று தினங்கள் என்னுள்ளே நான் 'துக்கம்'கொண்டாடிய பின்னர்தான் என்னால் மீண்டும் பேனாவைத் தொட முடிந்தது. நான் நினைத்திருந்தாலும் கூட அவரைச் சாவினின்றும் காப்பாற்றியிருக்க முடியாது. எத்தனையோ கைலாச முதலியார்கள் தற்கொலையைச்சரண்புகுந்தகாலச்சூழ்நிலைஅது!அதை நான் ஒருவனாக எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? அன்று அவர்சாகநேர்ந்ததுதான் யதார்த்தவிதி, என்றாலும் அந்தச் சாவு என் உள்ளத்தைத் தொட்டது; சுட்டது.

இராம கதையில் இந்திரஜித் மகோந்நதமான பாத்திரம்தான். என்றாலும் அவனுடைய மரணம் தருமத்தின் தவிர்க்க முடியாத விதி. இருந்தாலும், கதையின் இறுதியில் அத்தகைய பெரும் பாத்திரத்தைக் கம்பன் படைத்து, அவனை இலக்குவனின் கணைக்குக் காவு கொடுத்து விடுகிறான் அல்லவா? பின்னர் இறந்துபட்ட இந்திரஜித்தின் தலையைக் காட்டி செய்த கொலையினை நோக்கும்!'என்றுகூறும்போதுகம்பனது அந்தரங்கக்குரலே அதில் ஒலிப்பதைக் கேட்கிறோம் அல்லவா? அதேபோன்று