பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


சாற்றிக் கொண்டிருக்கும். மேலும் அவர் தமது வீட்டு மாடியில் ஒரு சிறு பூஜை அறையும் வைத்திருந்தார். காலையில் பூஜையெல்லாம் முடிந்த பிறகு தான் அவர் தொண்டையை நனைப்பார். அவர் சாதாரணத் தற்காரராயிருந்த காலத்திலேயும், வைகாசிவிசாகத்துக்கோ மாசித் திருவிழாவுக்கோ கூண்டு வண்டி கட்டிக் கொண்டு குடும்பத்தோடு திருச்செந்தூர் சென்று, நீராடி நேர்த்திக் கடன் முடித்துவருவதுவழக்கம். இப்போது அவர் முதலாளி என்ற அந்தஸ்துக்கு ஆளான பின்பும், சஷ்டியன்றும் கிருத்திகையன்றும் ஒரு போதும் விரதம் அனுஷ்டிக்கத் தவறுவதில்லை. அத்துடன் கடைசி வெள்ளிதோறும் தவறாது திருச்செந்தூருக்கு மாதாந்தமும் சென்று வந்து விடுவார்.

மாற்றுக் குறையாததெய்வபக்தியின் காரணமாகவும், தமது பூர்வ நிலையை மறந்தறியாத காரணமாகவும், அவர் தம்மிடம் தொழில் நடத்திய தறிகாரர்களிடத்தில் கூடிய பட்ச நாணயத்தோடும், மரியாதையோடும் நடந்து கொண்டார். பெரிய முதலாளிமார்களைப்போல், தறிகாரர் களின் வாயில் வயிற்றிலடித்துப் பணம் திரட்டவும், தறிகாரர்களிடத்தில் கண்ணியக்குறைவாகவோ, அதிகார முறுக்காகவோ நடந்து கொள்ளவும் அவர் முனையவில்லை. இதனால், தறிகாரர்கள் அனைவரிடத்திலும் பொதுவாக அவரைப்பற்றி நல்லெண்ணம் தான் நிலவி வந்தது.

வடிவேலு முதலியாருக்குக் கைலாச முதலியாரின் நாணயப் பொறுப்பிலும் நல்லெண்ணத்திலும் மிகுந்த நம்பிக்கை. எனவேதான் அவர் எப்படியும் நடப்பு வருஷத்தில் கைலாச முதலியாரைக் கோயில் தர்மகர்த்தா ஆக்கிவிடுவது என்றதீர்மானத்தோடு தறிகாரர்களிடையே அவ்வப்போது பிரசாரம் செய்து பலம் திரட்டி வந்தார். அன்றுமாலை நடக்கவிருந்த ஊர்க்கூட்டத்தில் கூலி உயர்வுப் பிரச்னையையும் தர்மகர்த்தாப் பிரச்னையையும் முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது, அன்றைக்கும் பொழுது அநேகமாகக் கருக்கலாகி