பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


 எண்ணெய்ப் பிசுக்கும் எண்ணற்ற கிழிசல்களும் நிறைந்த அந்த ஒற்றைத் துணி, கர்ணனோடு உடன் பிறந்த கவசம்போல், கழற்றவோ மாற்றவோ முடியாத நிலையில், அம்மனுக்கு மான சம்ரக்ஷணியாக உதவி வந்தது.இதுபோலவே, வருஷா வருஷம் மான்யம் வாங்கித் தொலைக்கும் கடனுக்காக, ஓதுவார் மூர்த்திகொண்டுவந்து. இவற்றும் வாய்க்கால் தண்ணீர் அபிஷேகத்தைத் தவிர, ஒரு எண்ணெய் முழுக்கு, பன்னீர் ஸ்நானம், சந்தனக் காப்பு என்ற விசேட சம்பிரமங்களும் அம்மனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஓதுவார் மூர்த்தியும் தம் வீட்டுச் செலவுக்காக நித்த நித்தம் கோயில் மடைப் பள்ளியில் சமைத்தெடுத்துச் செல்லும் வெள்ளைப் பொங்கலில் நாலைந்து பருக்கைகளுக்குக் குறைச்சலில்லாமல் அம்மனுக்குத் தூபம் காட்டி நிவேதனம் செய்து வந்ததால், தன்னைப் பட்டினி போடும் பாவத்தை ஊரார்மீதோ ஓதுவார் மூர்த்தி மீதோ சுமத்துவதற்கும் லோகநாயகிக்கு வழியில்லை. இந்தப் பருக்கைச் சோற்றைத் தவிர, அம்மனுக்குக்கொடைகூத்து என்ற கொண்டாட்டங்களோ படைப்புச்சோறு என்னும் புலால்விருந்தோ, பொங்கலோ, பூசையோ லபிக்கவில்லை. "சோறுகண்டமூளியார்சொல்?" என்ற கேட்காதகுறையாகத்தான் அம்மன் இருந்துவந்தாள். எனினும் காரில் எப்போதாவது காலரா, பெரிய அம்மை முதலிய தொத்து வியாதிகள் கொஞ்சம் தன்னிச்சையாக வேட்டையாடத் தொடங்கிவிட்டால், அம்மன் பாடும் வேட்டைதான், தெய்வகுத்தத்'துக்குப் பயந்து அம்மனைச் சாந்தி செய்வதற்காக ஊர் மக்கள் தலைக்கட்டுவரி வசூல்) செய்து பூப்படைப்பார்கள்; கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள்; விசேட மரியாதைகள் செய்வார்கள்.

கைலாச முதலியார் காலத்தில் இந்த நிலைமை மாறிவிட்டது

கைலாச முதலியார் தமது சொந்த நன்கொடையாக, அம்மனுக்கு நாலைந்து சேலைகளை வழங்கி, அவள்