பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


தயவினாலும், அந்த வட்டாரத்திலுள்ள ஒரு சில அரசியல் கட்சி அனுதாபிகளான இளைஞர்களின் உற்சாகத்தினாலும் அந்தப் போர்டு தன் மரியாதையை ஓரளவு காப்பாற்றி வந்தது. மாலை வேளைகளில் ஓரிரு தினசரிகளும், ஒரு சில வார சஞ்சிகைகளும் அங்கு வாசகர்களின் வரவு நோக்கி வழிமேல் விழி வைத்துக் கர்மயோகம் செய்யும். இட வாடகை என்ற மாதாந்திர பயங்கரம் இல்லாததாலும், இன்னும் நாலுபேர் அங்கு வந்து போய்த் தலைகாட்டிக் கொண்டிருந்ததாலும் வாசகசாலை மாலை நேரங்களில் பொது ஜன உபயோகத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும். அதாவது 'அடையாநெடுங்கதவு'மான அந்தமண்டபத்தின் ஒரு பகுதியில் வெற்றிலை பாக்குப் பலசரக்குக்கடை வைத்திருக்கும் மூப்பனாரின் புண்ணியத்தினால், மாலை ஐந்து மணி சுமாருக்கு அவரது கடைக்குள்ளிருந்து கருப்பட்டிச்சிப்பம்கட்டும்ஓலைப்பாய்கள் இரண்டும்,சில பத்திரிகைகளும் மண்டபத்துக்கு இடம் பெயரும். மறுபடியும் இரவு ஏழு மணி சுமாருக்கு, மூப்பனார், கடைசாத்தும் வேளையில் மீண்டும் அவரது கடைக்குள் அடைக்கலம் புகுந்துவிடும். வாசகசாலை என்று ஒன்றிருப்பதால், நாலுபேர் தமது கடைப்பக்கம் வந்து போய்க் கொண்டு இருப்பதற்கும், அதன் காரணமாகச் சில்லறை வியாபாரம் ஆவதற்கும், மாதக் கடைசியில் செல்லாகிப் போன பழைய பத்திரிகைகளைச் சாமான் மடிக்கும் காரியத்துக்காக, சரச விலைக்கு வாங்கிக் கொள்வதற்கும்வசதியும்வாய்ப்பும்இருந்ததேமூப்பனாரின் இந்தச் சேவா பூர்வமான ஒத்துழைப்புக்கு முக்கிய காரணமாகும்.

வடிவேலுமுதலியார்சாதாரணக்கைத்தறிநெசவாளி, மாதா மாதம் ஜவுளிக் கடைக்காரர்களிடம் நூல் வாங்கி, நெய்து கொடுத்தால், நெய்த கூலி வீட்டில் தினம் உலைப்பானை ஏற்றுவதற்குக் கட்டிவரும்.. சுருங்கச் சொன்னால், அவரது வாழ்க்கை பெரு வாழ்வுக்கு