பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
99



மின்னல் ஏற்படுவதற்கு முன்பாக மேகங்களி டைவே உள்ள மின்சார வித்தியாசம் சுமார் 10 கோடி வோல்ட் முதல், 200 கோடி வோல்ட் வரை இருக்கலாம், மின்னல் தனது 500) தடைகளையெல்லாம் எதிர்த்து எளிதில் பாய்ந்து செல்லும் தன்மை படைத்துள்ளதால்; அது தன் மனம் போனபடி நெளிந்தும், நீண்டும், பலவாறாகப் பிரிந்து செல்கிறது.

மின்னலினுடைய நீளம் பல கிலோ மீட்டர் வரை கூட இருக்கும். அகலம் சுமார், 10 முதல் 15 சென்டி மீட்டர் வரை இருக்கும்.

மின்னல் நமது கண்களுக்கு முதலிலும், இடி பிறகும் கேட்கிறது. ஆனால் உண்மையில் இடியும் மின்னலும் ஒரே சமயத்தில் தான் நிகழ்கின்றன.

ஒலியை விட ஒளிக்கு சக்தி அதிகம். ஒளி யானது ஒரு வினாடிக்கு 1 லட்சத்து 86 ஆயிரம் மைல் வேகத்தில் செல்கிறது.

ஒலியோ-காற்றின் வழியே வினாடிக்கு சுமார் 1100 அடி வீதம் தான் செல்கிறது. அதனால் தான் நாம் மின்னலின் ஒளியை முதலிலும், இடியின் ஒசையை பிறகும் கேட்கிறோம்.

இடியைப் பற்றி மற்றொன்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். மின்னலின் மின்சாரம்தான்