பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28

உள்ளது. அதனால்தான் எரிமலைகள் வெடிக்கும் போது பூமிக்குள்ளிருந்து, நெருப்பும், உலோகங்களும், வெடித்துச் சிதறுகின்றன. பூமியை சுமார் 5 மைல் ஆழத்திற்குத் தோண்டினாலே உள்ளிருந்து தீப்பிழம்புகள் வெளிவந்து விடும், சூரியனிடம் என்ன பொருள்கள் உள்ளனவோ; அவையனைத் தும் சூரியக் குழந்தையான பூமியினடியிலும் உள்ளன.

சூரியனிலிருந்து பிறந்த குழந்தைகளான கிரகங்கள் ஒன்பது என்றாலும், பூமி ஒன்றைத் தவிர வேறு ஒரு கிரகத்திலும் புல் பூண்டு கூட முளைக்க முடியாது. ஆனால் இந்த அதிர்ஷ்டக் குழந்தையான பூமியில் மட்டுமே உயிரினங்கள் பிறந்து வாழ முடிகிறது.

இதற்குக் காரணம் மற்றகிரகங்களுக்கு கிடைக்காத வசதி பூமிக்குக் கிடைத்திருக்கிறது. ஆம்! உயிரினங்கள் தோன்றி, வாழ்ந்து வளம் பெறு வதற்கு ஏற்ற அமைப்புக்கள் அனைத்தும் பூமியில் மட்டும் தான் இருக்கிறது.

உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு சூரியன் இன்றியமையாதவனாயிருக்கிறான். அவனது ஒளிக்கற்றையினால்தான் புல் பூண்டு முதல் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்கின்றன. சூரியது வெப்பத்தையும், ஒளியையும் போலவே-காற்றும், நீரும் இன்றியமையாத ஒன்று.