உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

கொடுத்து வளர்க்கறாங்க” என்று கூறிக்கொண்டு வரும்போதே அழகப்பனின் குரல் தழுதழுத்தது.

அழகப்பனது முதுகை ஆதரவாகத் தட்டிக் கொடுத்த உலகநாதன், நீதான் ஐந்தாவது வரைப் படித்திருக்கிறாயே; சுற்றுப்புறத்தைத் துரய்மையாக வைத்துக்கொள்வது பற்றியும்; சுகாதாரம் பற்றியும் எல்லோருக்கும் சொல்லக் கூடாதா?’ என்றான்.

உடனே அழகப்பன், "அதெல்லாம் எடுபடாது அண்ணா! பட்டணத்திலே நாலு எழுத்துப் படிக்கறதுக்குள்ளே நமக்கெல்லாம் புத்தி சொல்ல வந்துட்டான்னு எகத்தாளமாப் பேசுவாங்க.

இந்த ஊரிலேயே நிறைய இடம் இருக்கு மொட்டைக் குளத்துக்குப் போய் எல்லாரும் அங்கே மாடு குளுப்பாட்டலாம். தாமரக்குளத்திலே ஆம்பிளை, பொம்பளை, குழந்தைகள் எல்லாரும்கூடக் குளிக்கலாம். அப்படிச் செஞ்சா கண்ணம்மா ஏரித்தண்ணி சுத்தமான குடிநீராக எல்லோருக்கும் பயன்படும். இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது. எங்க ஊருக்குப் புதிசா ஒரு தமிழ்வாத்தியார் வந்திருக்காரு. ரொம்ப நல்லவரு. அவரை விட்டுத்தான், ஊர் ஜனங்களுக்குச் சொல்லச் சொல்லாம்னு இருக்கேன்” என்றான். "அதுதான் நல்ல யோசனை", என்ற உலகநாதன், வந்திருப்போரை எல்லாம் ஒரு முறை