உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

காகிதம், துணி, மற்றும் தாவரப் பொருட்கள் தாவர எண்ணெய், பெட்ரோல், மண்ணெண்ணை, எண்ணை வாயுக்களைப் போன்ற ஏதாவது ஒரு தீனி தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால் தீ தானாகவே அணைந்துவிடும்.

நாம் உயிர் வாழ பிராணவாயு எவ்வளவு அவசியமோ, அதுபோல், தீ எரிவதற்கும் பிராணவாயு அவசியமாகத் தேவைப்படுகிறது, பிராணவாயு கிடைப்பதில் தடை ஏற்பட்டால் தீ உடனே அணைந்துவிடும்.

ஆனால், எந்தப் பொருளையும் தீ எரித்துச் சாம்பலாக்கிவிடும்; தீயில் உருகாத, அல்லது உருக் குலையாத பொருளே இல்லை என்றிருந்த காலம் மாறி, இப்போது (Fire Proof) - தீப்பிடிக்காத பொருட்களை ஆராய்ச்சி செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

நமது உடலினுன்ளும் ஒரு பெரு நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. அதன் சக்தியால் தான், நாம் எந்தவகை உணவு உட்கொண்டாலும் ஜீரணமாகி விடுகிறது. இதற்கு 'ஜாடராக்கினி' என்று பெயர்.

இந்த ஜாடராக்கினி நம் உடலினுள் எரிந்து கொண்டிருப்பதற்கும் பிராணவாயு தேவை.