பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

அந்தத் தேவையை நாம் சுவாசித்து உள்ளே அனுப்பும் காற்றிலிருந்து பெற்றுக்கொள்கிறது. நாம் மூச்சு இழுக்கும் காற்றிலுள்ள பிராண வாயுவை, நம் நுரையீரலுக்கு வந்து சேரும் ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் தங்களுடன் ஏந்திச் சென்று, நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிர் அணுக்களுக்குக் கொண்டு போய்க் கொடுக்கின்றன.

கிட்டத்தட்ட கி. மு. 2000-ம் ஆண்டு 'தீயும் விறகும்.' என்னும் பொருள் படும்படியாக "ஜெபில்” என்னும் பெயருடன் ஒரு பாபிலோனிய தெய்வத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஆனால்-1669-ம் ஆண்டில், ஜெர்மானிய வேதியல் நிபுணர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட "பாஸ்பரஸ்"ஸால்தான் இன்று எளிதாக நெருப்பினைப் பெற உதவும் அரிய சாதனமாகித் தீப்பெட்டி உருவாக முடிந்தது.

1680-ம் ஆண்டு "ராபர்ட் ஃபாயில்” என்பவர், 'சல்பர்' தடவிய ஒரு குச்சியால், 'சல்பர்', தடவிய ஒரு தாளில் உரசினால் நெருப்பு உருவாகும் என்ப தைக் கண்டார். ஆனால் அதைச் செயற்படுத்துவதில் ஒரு தொல்லை இருந்தது. அந்த முறையினால் நெருப்பு எளிதில் தானாகவே பற்றிக்கொள்ளும் அபாயம் இருந்தது.