பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

படுகிறது. மணலைப் போட்டவுடன், காற்று கிடைப்பது தடைபட்டு தீ அணைந்துவிடும்.

O ஸ்டவ் எரிந்து கொண்டிருக்கும்போது அதில் எண்ணை நிரப்பக்கூடாது. ஸ்டவ் அடுப்பில் நெருப்புப் பிடித்து விட்டால் தண்ணீரில் நனைத்த கோணியைக் கொண்டு மூடி விட்டால் தீ அணைந்துவிடும்.

O மின்சாரக் கம்பிகளில் ஈரத்துணியை உலர்த்தப் போடக் கூடாது. மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

O தீப்பற்றி எரிகிற குடிசையிலோ, வீட்டிலோ உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவசரப்படாமல்; மீட்கச் செல்லுகிறவர்கள் தகுந்த முன் ஜாக்கிரதையுடன் செல்ல வேண்டும். இது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம்.

O தீயின் ஆதிக்கத்தில் சிக்கியிருக்கும் குடியிருப்புக்குள் நுழையும் போது தீவிர வெப்பம், மற்றும் புகை மண்டலம் இவை இரண்டையும் எதிர்க்கும் திறமையும் சக்தியும் பெற்றிருக்க வேண்டும்.

O வெப்பக் காற்றில் அதிக நேரம் இருக்க நேர்ந்தால், உடலிலுள்ள ஈரம் வற்றிப் போகும்