பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73


அதேபோல் சமையல் செய்யும்போது வாணலியில் தீப்பற்றிக் கொண்டால், தண்ணீரை ஊற்றக் கூடாது. அதற்குப் பதிலாக எண்ணையில் உப்பைப் போட்டால் தீ அணைந்து விடும். உப்பிற்கு, சூட்டைத் தணிக்கிற சக்தி உண்டு.

இப்படி தீயினால் ஆபத்துக்கள் வருகின்றனவே என்று எண்ணினால் அது அறியாமை. தி ஒரு நல்ல நண்பன். இந்த நவீன உலகத்தில் தீ மகத்தான காரியங்களுக்கெல்லாம் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது.

பெரிய பெரிய உருக்காலைகள், ரயில்வே தாண்டவாளங்கள்; இஞ்சின்கள், தளவாட சாமான்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இவையெல்லாம் முழுக்க முழுக்கத் தீயை நம்பியே செயல்படுகின்றன.

தீ விபத்திற்குத் தி ஒரு கருவியாகத்தான் விளங்குகிறதே தவிர, 'காரணமாக' அல்ல.

"மாரியப்பனின் தங்கையின் பாவாடையில் தீப்பிடித்துக் கொண்டது கூட அவளுடைய கவனக் குறைவால் ஏற்பட்ட ஒன்றாகத்தான் இருக்குமே தவிர-தீயின் குற்றமாக இராது. அதோ! மாரியப்பன் நம்மை நோக்கி ஓடி வருகிறானே. அவனையே கேட்டுப் பாருங்கள்” என்று அக்னிபுத்திரன் கூறிக் கொண்டிருக்கும் போதே,