பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

டாரு," என்று மாரியப்பன் விபரமாகக் கூறிக் கொண்டிருக்கும் போதே அழகப்பன் இடை மறித்து, "ஆமாம், சாந்தி பாடையில் எப்படித் தீ பிடிச்சுதாம்?" என்று கேட்டான்.

உடனே மாரியப்பன், "அம்மா, கீழே அடுப்பு மூடடிச் சோறு வெச்சிருக்காங்க. சாந்தி அடுப்புக்குப் பக்கத்திலேயே ஸ்டுலைப் போட்டுக்கிட்டு, பரணை மேலே வெல்ல டப்பா எங்கே இருக்குன்னு தேடியிருக்கா. கீழே அடுப்பிலேருந்த நெருபபு சாந்தியோடு பாவடையிலே பிடிச்சுடுச்சு" என்றான்.

எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"இப்போது புரிந்ததா?" என்று கேட்கிற, பாவனையில் பார்த்த அக்கினிபுத்திரன் சிரித்தபடி "நாளை சந்திப்போம்” என்று கூறி விடைபெற்றுக் கொண்டனர். மறுநிமிஷம் தேவகுமாரர்கள் மாயமாய் மறைந்தனர்.