பக்கம்:படித்தவள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 शााdf என்னை மன்னித்து விடு; என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்" என்றார். அவரை விடுவதாக இல்லை 'சுமார் என்பதற்காக வாவது பொருள் சொல்லி விட்டுச் செல்லுங்கள் என்றேன். "சுமார் முப்பது ஆண்டுகளாக நான் தமிழ் பயிலு கிறேன். எனினும் இச் சொல்லுக்குப் பொருள் அறிந்திலேன்" என்று கூறிவிட்டுக் கழற்றிக் கொள்ள முயன்றார். பாத்திரம் அறிந்து பிச்சைபோடும் பழக்கம் உடைய என் துணைவி அவர் ஆத்திரம் அறிந்து காஃபி கொண்டு வந்தாள். அவர் காஃபி என்றால் உயிர்; வந்தால் கேட்டு வாங்கிச் சாப்பிடாமல் போகமாட்டார். அன்று தானாக வந்து அவர் முன் அது அமர்ந்தது. "காஃபி சூடாக இருக்கிறதா?” என்று கேட்டுக் கொண்டே வந்தார். " Hot drink உங்களுக்குப் பிடிக்குமா” என்று கேட்டேன். - "தமிழில் பேசு தம்பி; அது எனக்கு அமிழ்தம் ஆகும்" "பத்திரிகைச் செய்தி சுடச்சுட இருக்க வேண்டும். பதில்கள் சுடச்சுடத் தரவேண்டும். தோசை சுடச்சுடத் தர வேண்டும்" என்று சொற்பொருள் பின் வர அவர் பதில் கூறினார். வைத்த காஃபியை மடமட' என்று குடித்து முடித்தார். மறுபடியும் கம்மினாட்டியைக் கொண்டு வந்து முன் நிறுத்தினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/106&oldid=802384" இலிருந்து மீள்விக்கப்பட்டது