பக்கம்:படித்தவள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 105 அது ஒரு பொம்மனாட்டி என்று பதில் சொன்னார். "எப்படி?” "ஆட்டி என்பது பெண்பால் சொல்" என்றார். "அதற்கு எடுத்துக்காட்டு பெண்டாட்டி; வெள்ளாட்டி" என்றார். "பாம்பாட்டி" என்ன பால்?" என்று கேட்டேன். அவர் திக்குமுக்கு ஆடினார். அவர் புலமை அவரைக் கைவிட்டு விட்டது. "இப்பொழுது என்னசெய்து கொண் டிருக்கிறீர்கள்? என்றேன். "பிழை இல்லாமல் எழுதுவது எப்படி என்று ஆய்வு: செய்து கொண்டிருக்கிறேன்" என்றார். "முதலில் எழுதுவது எப்படி. என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்” என்றேன். "புலவர்கள் எழுதுவது இல்லை; பிறர் பிழைகளைக் காண்பவர்தான் புலவர்கள்" என்று விளக்கம் தந்தார். "உங்களுக்கு அரசு பரிசு கொடுத்தார்கள்” என்று கேள்விப்படுகிறேன். "என் தமிழ்ப்பணிக்கு" "அது என்ன என்று கூற முடியுமா?” " எனக்கே தெரியாதே" என்று கூறி முடித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/107&oldid=802386" இலிருந்து மீள்விக்கப்பட்டது