பக்கம்:படித்தவள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 111 செய்; பக்தர்களுக்கு அருள் செய்வான் அவனை வணங்கு; ஒலமிடு" என்று அறிவுரை கூறினாள். என் செய்வது ஆபத்துப் பாந்தவன்; அனாதை ரrகன்; அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்; லட்சுமி கடாட்சம் பெற்ற ஆதி நாராயணன். அவன் கமலத் திருவடிகளில் விழுந்து வணங்கினேன். அவன்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும். அவன்தாளை வணங்கினால்தான் மனக்கவலை மாற்ற முடியும் என்று தமிழ் மறை நூல் சொல்கிறது. அதைப் பின்பற்றினேன். பல் விழுந்துவிட்டது என்றுதானே சொல்ல வேண்டும். அடகு வைத்து விட்டாள் என்று ஏன் கூறவேண்டும்; அந்தக் கிழவியைத் தேடிக் கண்டுபிடிப்பதைத் தவிர வேறு வழியே தெரியவில்லை. நான் என்ன கல்லூரிப் படிப்புத்தானே. மகா கவி கம்பருக்கே ஒரு சோதனை ஏற்பட்டு விட்டது என்று படித்து இருக்கிறேன். சாயுங்காலம்; வயல் வெளியே காற்று வாங்கச் சென்றார்; அப்பொழுது மின் விசிறி கண்டு பிடிக்காத காலம்; காற்று வெளியே சென்று வாங்கிதான் வரவேண்டி இருந்தது. சலசலத்த நீர் ஒட்டம்; வாய்க்கால் வழி ஒடி அங்கே: நெல்லுக்கு நீர் பாய்ந்து கொண்டிருந்தது ஏற்றப்பாட்டுப் பாடினான் ஓர் ஏர்உழவன், 'மூங்கில் இலை மேலே" என்று பாடிவிட்டான். அடுத்தவன் அதைப்பாடி முடிக்கவேண்டும். பொழுது சாய்ந்து விட்டது. முதியோர் கல்விக்கு ஒரு முத்துச் சாமி வந்து காத்திருப்பார் போல இருந்தது. கீழே இறக்கி விட டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/113&oldid=802400" இலிருந்து மீள்விக்கப்பட்டது