பக்கம்:படித்தவள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 एाdf மாதர் சங்கத்துக்கு மகளிர் செல்வதா? சத் கதா காலட் சேபங்களுக்குச் செல்வதா? என்று ஒரு விவாதத்தை எழுப்பி வைத்தேன். அது தீராத பேச்சாக நீண்டு கொண்டே சென்றது. அவன் மனைவி சத் கதா காலட்சேபங்களுக்கு மரியாதை தந்தாள்; அதை மிகவும் விரும்பினாள். கேட்பதற்குச் சுவையாகவும், இனிமையாகவும், ஆறுதலாக வும், மாறுதலைத் தருவதாகவும், கதை ஆர்வம் ஊட்டுவ தாகவும், பலமுறை அதே கதையைக் கூறுவதால் பதிவதாகவும் இருந்தன என்றாள். மாதர் சங்கத்தில் பழகுவதால் மனித நேயம் வளர்கிறது; புதுமை அறிய முடிகிறது. புதுப்புதுச் செய்களை அறிந்து கொள்ள முடிகிறது. எதுவும் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் ஊறுகாயில் உப்பு எந்த அளவு. போடுவது என்பதாவது அறிய முடிகிறது. குடும்பப் பெண் என்று முத்திரை குத்தி வைத்து நித்திரை செய்விக்க முடியாது. வடக்கே இமயமலை தெற்கே குமரிமுனை இதற்கு இடைப்பட்ட நில எல்லை; அதில் வாழும் பாரதப் பெண் என்ற பெரிய மாறுதல். இது மாதர் சங்கம் தருகிறது. இது என் மனைவியின் வாதம். இரண்டுமே கூடாது என்பது என் பிடிவாதம். அவர்கள் எப்படியாவது போகட்டும். நமக்கு ஏன் இந்த வீண் வாதம்? அவர்கள் நம்மை அறுக்காமல் இருக்க வேண்டுமானால் வெளியே அனுப்புவது அவ்வப் பொழுது என்பதுதான் உத்தம்மாகப் பட்டது. பழமையும் புதுமையும் அறியப் பராசக்தி கோயிலும் பராசக்தி படமும் இரண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/126&oldid=802428" இலிருந்து மீள்விக்கப்பட்டது