பக்கம்:படித்தவள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 125 தேவை என்றேன். மகாசக்திகள் இருவரும் நண்பர்கள் ஆயினர். மாதர் சங்கத்துக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்வதாக என் மனைவி சோபனாவுக்கு அழைப்பு விடுத்தாள். புதுமண வாழ்வில் ஒரு சிறு சிதைவுக்கு அது அடிகோலியது; மெல்ல மெல்லக் கணவனின் பிடிப்பு அவளை விட்டு அகலத் தொடங்கியது. அவனுக்கும் புது உறவுகள் வளர வாய்ப்புகள் ஏற்பட்டன. 8 ஆனந்தன், வரும்போது எல்லாம் ஏதாவது புதுப் பிரச்சனை உடன் கொண்டு வந்தான். "ஆனந்தன் இப்பொழுது என்ன உறுதி சொல்லிவிட்டு வந்தாய்?" அவளை வீட்டில் காண முடிவது இல்லை என்பதுதான் அவன் பிரச்சனை. "காரணம் ?” "அவள் சங்கச் செயலாளர்; நாடக டைரக்டர்; கதை வசனம் எல்லாம் அவள்தான்" "இதை எல்லாம் எப்படி அவள் கற்றுக் கொண்டாள்" "அதுதான் பெண்; கட்டுப் பெட்டியாக இருந்தவள்தான்: வாய்ப்புக் கிடைக்கிறது: அவள் இறக்கைகள் கொண்டு பறக்கிறாள்" "உன் நிலைமை?” "என்னை அம்போ என்று விட்டு விட்டாள்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/127&oldid=802430" இலிருந்து மீள்விக்கப்பட்டது