பக்கம்:படித்தவள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

11



‘முதியவர்கள் ஆசை’ என்ற ஒன்று இருக்கிறது என்றால் அது இதுதான் என்பதை உணர முடிந்தது.

ஆசை இருந்து என்ன பயன்? வாழ்வது அவ்வளவு எளிதாகவும் படவில்லை, கவலைகள் நிறைய இருப்பது சில சமயம் தேவைப்படுகிறது என்பதை என்னால் உணர முடிகிறது.

குண்டுபையன்; ஆனால் மண்டு என்று அவனைக் கூற முடியாது. அவன் பேசும் கொச்சை மொழி என்னை அவன்பால் இச்சை கொள்ளச் செய்தது. சின்னக் குழந்தையாக இருந்தால் அதனை மழலை என்று கூறலாம். அந்த இன்பத்துக்கு இவன் பேச்சு ஈடாகாது. மழலை அதில் பொருளே இருக்காது. சொற்கள் மட்டும் பற்களினின்று வெளிப்படும். அதில் எந்தக் கருத்தும் இருக்காது.

வரிகள் சில; ஓசை நயம்,அவ்வளவுதான். ‘சில்லாவல்லி ராமக்கா சீப்பு போட்டு வாரக்கா’ என்று சிரித்துக்கொண்டே அடுத்த வீட்டுச் சின்ன குழந்தை ஒன்று பேசும். அது அதன் பக்கத்து வீட்டுத் தெலுங்குப் பெண்ணின் தாக்கம்; அதனால் ஏற்பட்டது இந்த ஆக்கம். அந்தப் பெண்ணிடம் பாதி கற்றுக் கொண்டது என்று நினைக்கிறேன். ‘சில்லாவல்லி’ என்ற சொல் தமிழில் கேட்டதே இல்லை; இந்த ஓசை வரிகள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்த குண்டு அப்படி அல்ல; கருத்து உடைய சொற்களைப் பேசுவான். அந்த வீட்டுக்கு அவன் ஒரே பிள்ளை; அதனால் அவன் குண்டாகி விட்டான் என்று தெரிகிறது. எதற்காக இவ்வளவும் சொல்கிறேன்; சில விஷயங்களில் ‘சீரியஸ்னெஸ்’ இருக்கக்கூடாது. அதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/13&oldid=1123425" இலிருந்து மீள்விக்கப்பட்டது