பக்கம்:படித்தவள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 gাd பெரிய தவறு செய்துவிட்டேன் என்று வருந்துவேன். அவள் செய்த தவறை மறந்து விட்டேன். காலம் காலமாக இது மாபெரும் தவறு என்று பிரச்சாரம் செய்தார்களே அவர்கள் தாம் குற்றுவாளிகள் என உணர்கிறேன். ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி அவர்கள் தவறுவது மனித இயல்பு. உணர்வுகள் அவர்களை மயக்கிவிடும்; இதைப் பெரிதுபடுத்தாதே என்று எந்த மடையனாவது இது வரை எழுதி வைத்தானா! "எங்கள் சிறையில் இதைத் தான் பேசுவோம். நமக்கு அறிவு தந்த நீதி நூல்கள் தவறு செய்து விட்டன என்றுதான் பேசிக் கொள்வோம்" என்றான். "அவை தவறு செய்யவில்லை. அதை எழுதிய காலம் வேறு இன்றைய மனிதன் வாழும் சூழ்நிலை வேறு" என்று அவனைச் சமாதானம் செய்து அனுப்பினேன். "நாளடைவில் அவள் படத்தை மாட்டி வைத்துச் சிறையில் வழிபடுவேன்; அவள் எனக்குத் தெய்வமாக மாறிவிட்டாள். என் மனம் திருந்தி விட்டது அவள் தவறு செய்யவே இல்லை. மானிட இயல் இது என்று உணராத நான் தான் தவறு செய்து விட்டேன்” என்று கூறி வருந்தினான். அவனுடைய சந்திப்பு எனக்கு ஒரு படிப்பினை. என் அறிவு தெளிவு பெற்றது. அன்னாகரினாவின் கதை உலகுக்கே ஒரு படிப்பினை. பெண் சாகக் கூடாது. இந்தப் பழைய ஆசார நீதிகள் சாகவேண்டும் என்றுதான் தோன்றியது. அவை செத்துக் கொண்டுதான் இருக்கின்றன. யாரும் இனித் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணரும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/134&oldid=802446" இலிருந்து மீள்விக்கப்பட்டது