பக்கம்:படித்தவள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 137 "இது திருக்குறள்; அதனால் உரை தேவை” என்றேன். "எந்தச் செய்தியாயினும் நிகழ்ச்சியாயினும் நீயே அதைப் பற்றி நினைத்துப்பார்; ஏன் அவ்வாறு நிகழ்ந்தது. நாம் அந்தச் சூழ்நிலையில் எவ்வாறு நடந்திருப்போம்;அதற்கு மன இயல் மட்டுமா காரணம்? உடற்கூறு எந்த அளவு பொறுப்பு ஆகிறது: பருவ நிலை, சூழ்நிலை எல்லாம் ஆராய வேண்டும். நூல் அளவு மட்டும் பயன் தராது; நுண்ணறிவும் துணை செய்ய வேண்டும்" என்றார். "ஐயா நான் சிந்தித்துப் பார்க்கிறேன்." "கற்றதனால் என்ன பயன் கடவுளைத் தொழா விட்டால் என்ற ஒரு குறள் எனக்குக் குழப்பத்தைத் தருகிறது” என்றேன். "கல்வி தந்தால் அறியாமை நீங்குகிறது. அதற்குப் பின் தெளிந்த ஞானம் பிறக்கிறது. ஞானம் வந்த பிறகு மூட பக்தி எதற்காக" என்று கேட்டேன். கல்வி கற்பதால் நீ இறைப் பொருள் ஒன்று உண்டு என்று அறிந்திருக்க வேண்டும். அப்படி அறிந்திருக்க வேண்டிய நீயே கடவுளைத் தொழாதிருப்பது தவறு அல்லவா? கல்வியின் பயனே அறிவுடைமை; அறிவின் பயன் ஆண்டவனை உணர்தல்" என்று விளக்கினார். "கற்பவை என்பவை யாவை? அவர் எதன்ைக் கூறுகிறார்?" "அறம் பொருள் இன்பம் வீடு இந்த நான்கு பற்றிய அறிவு தரும் நூல்கள்" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/139&oldid=802451" இலிருந்து மீள்விக்கப்பட்டது