பக்கம்:படித்தவள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 139 "இன்று பயங்கரவாதமாக மாறி விட்டது” என்று கூறினார். அந்தப் படத்தில் மூவர் இருந்தனர். பகத்சிங்க், ராஜகுரு சுகதேவ். தமிழ் ஆசிரியர் இப்படிச் சிந்திப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்னொரு புதிய படம் மாட்டி வைத்திருந்தேன். நான் வைத்திருக்கும் புதிய படத்தின் மீது அவர் பார்வை சென்றது. "இவர் யார்? ஞானி போல இருக்கிறாரே என்று கேட்டார். "என் பாலிய அறிமுகம்; கொலை செய்து விட்டார்; மனம் திருந்தி ஞானியாகி விட்டார்” என்றேன். "உனக்குக் கொலையாளிகளைத் தவிர வேறு யாருமே கிடைக்கவில்லையா?” "நாம் கொலை செய்யாமல் இருக்க இவர்கள் தேவைப்படுகிறார்கள். எவ்வளவு பெரிய உயர்ந்த லட்சியம் ஆனாலும் சரி; அதற்காகக் கொலை செய்வது அறியாமை, கொடுமை; பிரித்த உயிரை நம்மால் சேர்க்க முடியாது என்ற பேருண்மையை நினைவில் நிறுத்த இவர்கள் தேவைப் படுகிறார்கள்” என்றேன். "இவர் என்ன செய்கிறார்?" "பிச்சை எடுக்கிறார்; யாரிடமாவது பேசிக் காசு பெறுகிறார். தான் ஒரு கொலையாளி என்கிறார். அவர்கள் மறுப்புக் கூறுவது இல்லை" "அச்சம் காரணமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/141&oldid=802454" இலிருந்து மீள்விக்கப்பட்டது