பக்கம்:படித்தவள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ராசீ


இல்லாத வாழ்க்கை, கடமைகளைத் தவிர வேறு உடைமைகளைக் காண முடியாத கட்டம்.

அவள் எனக்கு மணற்கேணியாக இருந்தாள். இப்பொழுது வறட்சிநிலை ஏற்பட்டுவிட்டது. காரணம் பையன். அவனுக்குக் கலியாணம் பண்ணிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வீடு என்றால் ஏதாவது புது நிகழ்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். காலா காலத்திலே அவனுக்கு ஒரு கலியாணம் பண்ணி வைக்க வேண்டும் என்ற ஆசை; அது நிறைவேறாத நிராசை; அதைவிட என்னிடம் எது பேசுவது என்று தெரியாத ஒரு சூழ்நிலை; எப்பொழுதும் ‘கடுகடுப்பு’. அன்பை மறந்து பல ஆண்டும் ஆகிவிட்டது போன்ற ஒரு வெறுப்பு. ஆசை முகம் மறந்து விட்ட துவேஷ நிலை.

மனைவி என்றால் ஏதாவது இதமாகப் பேசலாம் என்று போவேன்; மிகவும் பதமாகத்தான் பேசவேண்டி இருந்தது; அவள் கதமாகவே இருந்தாள். இது நிதமான நிகழ்ச்சியாக இருக்கும். அதனால் வீட்டில் எனக்கு இருப்புக் கொள்வது இல்லை.

எனக்கு எப்பொழுதும் ஏதாவது பேச வேண்டும்; வெறும் வாய் எனக்கும் பிடிக்காது; அவலை மென்று கொண்டே இருக்கவேண்டும்; அதனைக் கிண்டல் என்று சொன்னாலும் சரி; கிசுகிசுப்பு என்று முசுப்பினாலும் சரி; அளப்பு என்று நிறுவினாலும் சரி; என் நா அசைந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் விரைவில் தாயுமானவர் ஆகிவிடுகின்றனர்; உண்பது உடுத்துவது அல்லாமல் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/62&oldid=1139525" இலிருந்து மீள்விக்கப்பட்டது