பக்கம்:படித்தவள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 93 "இதிலே என்ன விசேஷம்" என்று கேட்பான்: "இதில் தினமும் ஒரு துணுக்கு வருகிறது. அது மட்டும் படித்துத் திருப்பித் தந்து விடுவேன்” என்பேன். சின்னப் பையன்; அதனால் சின்ன விஷயங்களைப் பேசி நாங்கள் எங்கள் சின்னாள் ஆகிய வாழ்நாளை நன்னாளாக்கிக் கொண்டிருந்தோம். சின்னாள் பல்பிணிச் சிற்றறிவுடையவர் மாந்தர் என்று பெரியவர்கள் பேசி இருக்கிறார்கள். அதனால் அதை நன்னாள் ஆக்க முயன்றேன், எங்கள் சிற்றறிவுக்கு எட்டிய சிறு விஷயங்கள் இவை. அவன் இன்னும் எட்டுவயது கூடினால் மார்க்கண்டேயன் ஆவது உறுதி; அவன் வீட்டில் வீடியோவில் பதினாறு வயதில் ஒரு படம் பார்த்து விட்டுவந்தான். "என்ன படம்?" என்றேன். "பதினாறு வயதில்” என்றான். "இந்த எட்டாவது வயதில் நீ என்றேன் "இந்த எட்டாவது வயதில் நீ ஏன் பதினாறு வயது பார்க்க வேண்டும்” என்று கேட்டேன். "ரீதேவி அக்கா நடிக்கிறாள்; அதனால் அந்தப்படம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்" "எனக்கு ரீதேவியையே பிடிக்கும்” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/95&oldid=802596" இலிருந்து மீள்விக்கப்பட்டது