பக்கம்:படித்தவள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 95 "அப்படியானால் அவன் ஒரு கம்மினாட்டி" என்றேன். "இது எங்கேயோ கேட்டமாதிரி இருக்கே" என்று தொடர்ந்தேன். "கம்முன்னா கம்மு கம்முன்னாட்டி கோ" என்று ஒப்பு வித்தான். கம்மனாட்டி என்றால் என்ன என்று ஆராய்ச்சி என்னுள் எழுந்தது. "கோபி" என்று கூப்பிட்டேன். "இனிமேல் கோபி என்று என்னைக் கூப்பிட்டால் கெட்ட கோபம் வரும்” என்றான். "நல்ல கோபம் வர என்ன என்று கூப்பிட வேண்டும்" என்று கேட்டேன். "கோபமே வரக்கூடாது" என்றான். "ஏன் ?” "ஆறுவது சினம்? இது அவ்வையின் வாக்கு" என்றான். "பின் உன்னை எப்படித்தான் கூப்பிடுவது?” "கோபால கிருஷ்ணன் இந்த முழுப் பெயரை வைத்துத் தான் கூப்பிடவேண்டும்; அப்படித்தான் பள்ளிக்கூடத்தில் கூப்பிடுகிறார்கள்” என்றான். - "உங்களைப் போன்றவர்களால்தான் இந்தியாவின் பொருளாதாரமே விரயம் ஆகிறது. உன்வாழ்நாளில் உன் பெயர் எத்தனை தடவை எழுதுவாய், எண்ணிப்பார். எவ்வளவு மை ஆகும் என்று யோசித்துப்பார். கூப்பிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/97&oldid=802598" இலிருந்து மீள்விக்கப்பட்டது