பக்கம்:பட்டத்தரசி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கவலை




அதிவேக மாய்ஓடும் குதிரை,தன்னை
அரபியர்கள் நம்நாட்டுக் கனுப்பு கின்றார்,
 மதுக்கலசம், கண்ணாடி, மயிலின் தோகை,
மற்றவர்கள்
அனுப்புகின்றார்,
வடக்கு வேந்தன்,
பொதியமலைச் சந்தனத்தை அரைப்ப தற்குப்
புதுவட்டக் கல்லனுப்பி, எச்சில் முத்தம் பதிவாக்கப் பெண்டிரையும் அனுப்பு கின்றான்
பrண்டியன் அத் துண்டிலுக்கு மீன கின்றான்.




பார்ப்பனர்கள் நம் நாட்டில் நுழைந்து, எல்லாப்
பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, நம்மை வேர்பறித்து வருகின்றார். இந்த சூழ்ச்சி வேந்தனுக்குத் தெரியாது; உணர்த்தி னாலும் நீர்மீது கொள்ளிதனை வைத்தல் போன்ற நிலையேதான் நிச்சயமாய் ஆகும். இந்த ஊர்மக்கள் உயிரற்ற கற்கள்! நாட்டு உணர்ச்சியில்லை, தமிழர்க்கு எழுச்சி இல்லை :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/22&oldid=1510771" இலிருந்து மீள்விக்கப்பட்டது