பக்கம்:பட்டத்தரசி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா

கிளிஞ்சிக்குள் வெண்முத்து வைத்து மூடிக் கிலுகிலுப்பை போல்ஆட்டும் மதுரை மூதூர், அளித்துள்ள செல்வத்தை, பிழைக்க வந்தோர் அனுபவிக்க விட்டுவிட்டோம்; வீழ்ச்சி யுற்ருேம்; தளர்ந்துள்ளோம்; தாழ்ந்துள்ளோம்; சங்க காலத் தமிழ்வாழ்வை மறந்துள்ளோம்; இதனை நாட்டில் விளக்குகின்ருேம்; எழுதுகின்ருேம்; பேசு கின்ருேம்; வேண்டுமென்று நம்மவனே எதிர்க்கின் ருனே!

இளம்பருவம் உடையவர்கள். தம்மு டம்பின், எடைபார்க்க முயல்கின்ருர் அன்றி, நன்கு வளர்ந்துளதா நம்மறிவு? நேற்றைக் கின்று, வாழ்வினிலே உயர்ந்தோமா? வாழ்ந்த வாழ்வு வளைவானேன்? என ஆய்ந்து பார்த்து, தக்க வகைதேட ஓர் இளைஞன் நாட்டில் இல்லே! விளையாட்டு மந்திரிகள், மயங்கும் மன்னன்; வேதியரின் காலடியைக் கழுவும் மக்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/23&oldid=662094" இலிருந்து மீள்விக்கப்பட்டது