பக்கம்:பட்டத்தரசி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா

கிழவயது, குரங்கழகு, உடையோர் கூட, கிளிச்சிறைப்பொன் ஆபரணம் அணியுங் காலம். பழக்கூடை பருவமலர்! போன்ற உங்கள் பத்தினிக்கோ, முக்குத்தி கூட இல்லை. தழைத்துள்ள புன்னேமலர் அரும்பை யேனும் தந்திடுங்கள் முக்குத்தி என்று! விண்மீன்; விழுந்தாலும் அதனை ஒரு மாலை யாக்கி விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வேன்-என்ருள்.

காலுக்கு மேலேஓர் விரியன் பாம்பு, கடித்தபடி இருக்கின்ற காட்சி போல; சேலேமலைத் தேன்பூவே! உனது காலில் சிலம்பிருந்தால், நடக்கும் போது பாடும். மாலையிட்ட உன்கழுத்தில், அழகு முத்து மாலையிட்டால், அம்மாலே நீயும் நானும், லே இருள் உண்டாக்கி இன்பங் கானும் நேரத்தில் உறுத்திடினும், வலித்தி டாது?

ᎽᏰᏑᎴ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/35&oldid=662121" இலிருந்து மீள்விக்கப்பட்டது