பக்கம்:பட்டத்தரசி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டத்தரசி

கரும்புரசம் போல்இனித்து, மருந்து போலக் கணக்காக வடிக்குஞ்சொல் வழங்கும் மாதே! பருவத்தால், பழஉதட்டால், பார்வை தன்னைப் பசியெடுக்க வைத்துவரும் அழகால், ஒவ்வோர் இரவினிலும் என இனிக்க வைக்கும் போது; ஏதேதோ கேட்கின்ருய், ஆசை யோடு. குருத்துகிகர்ப் பட்டுடையும், நகையும், வாங்கிக் கொடுக்கத்தான் எனக்காசை, என்ன செய்வேன்?

கல்லெடுத்து கட்டுவைக்கச் சொல்லிச் சொல்லிக் கடவுளென நம்பவைத்துப் பிழைத்து வந்தோம். புல்லெடுத்தோம்; தமிழ்நூலில் நெருப்பு வைத்தோம்; புவிவேந்தன் முன், பெண்ணின் முகத்தை வைத்தோம். வில்லெடுத்த ஏகலைவன் என்போன், கட்டை விரலெடுத்த கம்மரபின் சூழ்ச்சி தன்னே, எல்லோரும் நன்குணர்ந்து விட்டார்; முன்போல் ஏய்க்கமுயன் ருல் முதுகு வீங்கிப் போகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/36&oldid=662123" இலிருந்து மீள்விக்கப்பட்டது