பக்கம்:பட்டத்தரசி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொங்குதேர்வாழ்க் கைஎன்னும் செய்யுள் தன்னில் குறைஎன்ன நீர்கண்டீர்? கூறும்,-என்று,
தங்கமுடித் தமிழரசன் கேட்க, 'இந்தத்
தமிழ்ப்பாடல் பொருட்குற்றம் உடைய" தென்று, அங்குள்ளோர் அனைவர்க்கும் விளக்கம் தந்து,
அரசாங்கப் பரிசுதனே கப்ப லுக்கோர்
நங்கூரம் இட்டதுபோல் நிறுத்தி விட்டான்,
நல்லதமிழ்க் காவியங்கள் இயற்றும் கீரன்.

கிடைப்பதனைக் கெடுத்தன்றே விட்டான். இந்தக் கீரனெனும் படுபாவி! எனக்கு இங்கே,
தடைக்கல்லாய், பகைச்சொல்லாய், இருப்போன். இந்தக் தமிழ்க்குள்ளன்; இனிஇவனைப், பதுங்கி நின்று. நடக்கையிலே சுருக்கென்று முள்போல் குத்தி. நரித்தனத்தால் வழிவாங்க வேண்டும்-என்று
வடக்குநதி விட்டுவந்த பார்ப்பான் மைந்தன்
மனத்தினிலே திட்டமிட்டுத் திருப்பிச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/40&oldid=1518529" இலிருந்து மீள்விக்கப்பட்டது