உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டத்தரசி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்ணொருத்தி, அவன்சென்ற பின்னர், கல்விப் பெருஞ்சபைக்கு வந்துஒரு ஓலை தந்தாள்.
எண்ணங்கள் வைத்தெழுதும் கீர னாரே,
இச்செய்யுள் சரிதானா?-என்றான் வேந்தன்.
பண்சிறப்பும்; பாட்டினது சிறப்பும் பார்த்தால்,
பரிசுதரல் இவளுக்கே பொருந்தும்-என்று,
மண்ணாளும் மன்னனிடம், கீரன் சொன்னான்.
மற்றவரும் அம்முடிவை ஒப்புக் கொண்டார்.

சமைக்கத்தான் பெண்டிர்க்குத் தெரியும், என்ற
தம்பட்டப் பேச்சுதனைப் பொய்க்க வைத்த,
அமுதுக்கு நிகரான அணங்கே இந்தா
ஆணிப்பொன் பெற்றுக்கொள்; என்று ஈந்து, சமுத்திரத்தின் வெண்முத்தை மேலும் வாரித்
தந்திட்டான் மங்கையிடம், மதுரை மன்னன். தமிழ்க்கவிதை தனைநன்கு வளர்க்க, இன்றோர்
தமிழச்சி கிடைத்திட்டாள்!-என்றான் கீரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/41&oldid=1518526" இலிருந்து மீள்விக்கப்பட்டது