பக்கம்:பட்டத்தரசி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரிசளிப்போ ஆயிரம்பொன்; அதுவோ செம்பொன்; பாவையவள் நல்லுடலும், மின்னும் செம்பொன்; வரிவிழியாள் வளைக்கரத்தில் முத்து; மங்கை வாயிதழின் உட்புறத்தும் முத்து; கீரன்,
தெரிவித்த வாக்கியமோ, நல்ல தீர்ப்பு;
தேன்மொழியாள் புதுப்பாட்டும், நல்ல தீர்ப்பு; அரசனுக்கும் ஆனந்தம்; பரிசு பெற்ற
அணங்குக்கும், புகழாலே பேரா னந்தம்.

தென்கடலின் வெண்முத்து தன்னே-எட்டுத்
திசைபுகழும் பேரரசன் ஈந்த பொன்னை-
அன்னநடைப் பெண்ணரசி, பரிசு பெற்று,
அகங்குளிர, முகம்மலர, அங்கே, நின்றாள்.
மன்னவனே ஓர்வார்த்தை தமிழ்ச்சங் கத்தில்
மங்கைக்கும் இடமளிப்போம்-என்றான் கீரன்.
என்ன இது, சர்க்கரையின் அருகில், செந்தேன் இருப்பதற்கா தடைசெய்வேன்-என்றான் வேந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/42&oldid=1518521" இலிருந்து மீள்விக்கப்பட்டது