பக்கம்:பட்டத்தரசி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேய்ந்த கனவு

இந்நேரம் சென்றிருப்பான் மைந்தன்; பாட்டு
ஏடுதனைத் தந்திருப்பான், சங்கந் தன்னில்;
இந்நேரம் கவிஞர்களின் கண்கள் பார்க்கும்:
இதயங்கள் வாசித்துக் கொண்டி ருக்கும்.
இந்நேரம் தீர்ப்பளித்துப் பரிசுப் பொன்னை
இந்தாநீ பெற்றுக்கொள் என்றி ருப்பர்.
இந்நேரம் பொன்பெற்று பூரிப் போடு,
எனதுமகன் திரும்பிக்கொண் டிருப்பான் வீடு!

என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டி ருந்தாள். எழிலரசி சிவன்மனைவி சிவனோ; வீட்டுச்
சன்னல்தனைத் தேடிவரும் காற்று போலத்
தானாக வந்திடுவர் பொருளி ருந்தால்-
என்றதொரு எண்ணத்தில் ஆழ்ந்தி ருந்தான். இருவரும்இவ் வாரிருக்கும் போது, மன்னன்
மன்றத்தில் தான்பெற்ற தோல்வி யோடும்,
மனத்தினிலே சோர்வோடும் வந்தான் மைந்தன்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/44&oldid=1518514" இலிருந்து மீள்விக்கப்பட்டது