உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 பாணாற்றிற் கொடுநுகம்" எனநேராக உருண்ட நுகத்தடியைக் கூறுதல் காண்க. இப்பாடலிலேயே கொடுந்திண்ணை யென்று வரு தல் காண்க. நெடுங்கடை என்றார் பலருண்டற்குத்தக அகன்றி விருந் ருத்தல் கருதி. விருந்துண்டானாப் பெருஞ் சோற்றட்டில்- உயர் தினர் உண்ணுதலான் இல்லையாகாத பெருஞ்சோற்றினையுடைய பாகசாலை. பின்னும் பின்னுமாக்குதலான் இல்லை யாகாமை குறித் தார். ஆனுதல் - இல்லையாதல் என்று பொருள் படுதல் அறிக. மழையான்ற அமையத்து" மழையில்லையான காலத்து எனவரு தல்போலக் கொள்க. அட்டிலையும் ஒள்ளிய சுவரினையுமுடைய நல்லில் என்க. ஒள்ளிய சுவரைச் சூழவெடுத்து அதன்கண் அட்டி கூறினார். லும் நல் இல்லமும் அமைக்கப்பட்டதனால் இவ்வாறு நல் இல் என்றார் நல்லோர் பலருள்ள இல்லம் ஆதல் கருதி. திணையிருந்து பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்- இவ்வாறு உயர்ந்த திண்ணையிலிருந்து பசிய கிளிகள் பாலையருந்தி இன்சொற் சொல்லும் செழித்த ஊரென்க. கிளி மிழற்றும் செழுநகர் எனவும் கிளி பாலார் செழுநகர் எனவும் கொள்க. அட்டில் சிறிது சேய்மை யின் இருத்தலால் புகையழுக்குப்படாத ஒண்சுவர் நல்லில் என்றார். கனியன்றிப் பால்உண்ண வேண்டாத கிளியும் பாலார்தல் குறித்து அந்நகரின் பான் மிகுதி காட்டினார். இனி உயர்திணையிருந்து கிளி பாலார் செழுநகர் என்றது, கிளி உயர்திணையொப்ப வீற்றிருந்து பாலுண்ணும் செழுநகர் எனினுமமையும். பேச்சுடைமையால் உயர்திணையாகச் சேரவிருத்தல் குறித்தார். தம் கருத்தை வெளிப் படுக்குஞ் சொல்வன்மை யுடையார் உயர்திணையராதல் குறிக் கொள்க. அவ்வன்மையில்லன அஃறிணையாதலுங் காண்க. தொடு தோல் - செருப்பு. தொடு தோலடியர் என்றார் சுடுபாலைநிலத்தவர் என்பது தோன்ற. துடிபடக் குழீஇ - துடி ஒலித்த அளவிற் றிரண்டு தொடுதோலடியராகிய கொடுவிலெயினர் என்க. எப்போ தும் வளைந்த வில்லுடைய வேடர். கொடுமை வில் கொடுவில் எனி னுமாம் துடி - அந்நிலப்பறை. 266- 270. எயினர் கொள்ளையின் உண்ணுதலான் உணவில்லை யான வறிய நெற்கூட்டில் உள்ளிடத்திருந்தது. வளைவாய்க்கூகை வளைந்தவாயினையுடைய கூகை. உணவின்மையாற் பகற்பறவை