92 யாகிய காக்கையில்லை யென்றும் அப்பகையின்மையாற் பகலிற் கூகை குழறவும் என்றும் கருதினார் என்க. "பகல்வெல்லுங் கூகையைக் காக்கை' (குறள். 481) குழறுதலும் என் றதுகாண்க. இரவில் எலியும் இன்மையால் உணவின்றிக் கூகை குழறவும். இல்லெலி வல்சி வல்வாய்க் கூகையென்பது காண்க, கிளி மிழற்றுபாலார் செழுநகர் என்றதற்கு முரண் இஃதென்றுணர்க. விருந்துண்டற்கு எயினர் கொள்ளையுண்டதும் பெருஞ்சோற்றட்டில் என்றதற்கு உணவில் வறுங்கூடும், நல்லில் உயர்திணையிருந்து என் தற்கு வறுங்கூட்டுள்ளகத் திருத்தலும் கிளிக்குக் கூகையும் பாலார் தற்கு உணவின்றி யிருத்தலும், மிழற்றுதற்குக் முரணாக வை வத்தோதுதல் காண்க. நகர் ஊர்கள் கவினழிய-மாநகரங் களாகிய ஊர்கள் அழகழிய, அருங்கடிவரைப்பின் ஊர் - அரிய காவலையுடைய மதிலை யுடைய ஊர்கள். இத்துணையும் பகைவர்நாடும் ஊரும் கவினழிதல் காட்டியபடி. பெரும்பாழ் செய்தும்- பின்னும் வளன் உண்டாகாதபடி செய்தபாழாதலிற் பெரும்பாழ் என்றார். பாழ்செய்தும் அதனாலுந்தன் சினம் அமையானாகி, அமைதல்- இல்லையாதல். மருங்கற - அப்பகைவர்க்குத் துணையாய சுற்றம் அற்றொழிய. மருங்கு-அவர் குலமெனினுமமையும். 271-75. மலையகழ்க்குவன் - மலையை அகழ்தல் செய்வன். இவன் குலத்து முன்னோன் காவிரி கொணர்வதற்குக் குடகக்குவடு அகழ்ந்தது நோக்கியது. எனவும், "கொங்கிற் குடகக் குவடூடறுத் திழியத் தங்கும் திரைப் பொன்னிதந் தோனும் மலைகொன்று பொன்னிக் குவழிகண்ட கண்டன்" (மூவருலா) (தக்கயாகப். 549) எனவும் வருதலானறிக. கடல் தூர்க்குவன் - கடலைத் தூர்த்தல் செய்வன். இச் சூரியகுலத்து அயோத்தியரிறை கடல் தூர்த்துத் திருவணை கட்டியது நோக்கிற்று. இனி "மேல்கடலில், வீங்குநீர்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/107
Appearance