உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 'உன்னியது முடிக்கும் வேந்தனது சிறப்புக் கூறியது எ-று. (தொல்.புறம். 12) பல் ஒளியர் பணிபு ஒடுங்க- பலரால் ஒன்றுபட்ட ஒளிப்பற்றிலுள்ள வேளாளர் இவனைப் பணிந்து இவனுக்கு ஒடுங்கி யொழுகவும் என்க. " 'ஜயசிங்க குலகால வளநாட்டு வட சிறுவாயில் நாட்டு ஒளிப்பற்று வாளுவ மங்கலம்" எனப் புதுக்கோட்டைச் சாசனத்தின் (No.145) வருதலான் இவ்வொளியரிருந்த இடன் அறியலாகும். தொல் அருவாளர் நாட்டார் இவன் ஏவிய தொழில் கேட்ப-பழைய அருவாள் தொழில் கேட்டொழுகவும். தொல் அருவாளர் என்றது அருவா தலையாரை யெனினுமமையும். தமிழ் நாட்டினகத்துத் தெற் கட் பகுதியும் வடக்கட் குறித்தார். வட 276-80. வடவர் வாட-தமிழ் நாட்டிற்கு வடக்கண்ணுள்ளவர் இவன் படை யெடுப்பன் என்று மனம் வாட எ-று. " சாக் கண்ண வடபுலத் தரசே" (புறம் 34) என இவன் தந்தையைப் பாடுதலான் அவனைப் போல இவனும் வரல் கூடுமென்று வடவர் வாட என்க.இனி, "கொடியணி யேனம்" ".பொடியணிந்து கிடப்ப, வட திசை வாகை சூடித் தென்றிசை வென்றி வாய்ந்த வன்றார் விடலை, வளவ னிமிழிசை வேங்கடம் போல நாவலொடு பெயரிய ஞாலம் காவல் போற்றி வாழியர் நெடிதே' (தொல். செய்.146) எனப் பேராசிரியர் உரை மேற்கோள் வருதல் பற்றி இவ்வளவனே பன்றிக் கொடியுடைய சாளுக்கியனை வாடச் செய்தான் என்பதூஉ மாம். சாளுக்கியர் வேள்புலவரச ரென்ப.