உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 தன்னாட்டிற்குக் குடக்கணுள்ள நாட்டார் மனங்குவியத் தன் னாட்டிற்குத் தெற்கணுள்ள பாண்டியன் வளங் கெடச் சீறி. சீறி- உள்ளத்தாற் சீற்றஞ் செய்து. "மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே (புறம்.42) என இவ்வளவனை இடைக்காடனார் பாடுதலான் இவ்விருவரும் பகைஞராதல் அறிக. இப்புறப்பாட்டுப் பாண்டியனைப் பாடியதாக லாம். வாழிவளவ" என வருதலானும் "மென்புல வைப்பினன் னாட்டுப் பொருந நெய் எனப்பாடுதலானும் இனிது துணியலாம். மென்புலம் மருதமு நெய்தலும் என உரைகாரர் உரைத்ததுங் காண்க. மருதமு தலுமிக்க நாடு சோணாடாதல் காண்க. பலரையும் பன்மையாற் கூறியவர் தென்னவன் எனப் பாண்டியனை ஒருமையாற் கூறியது அவன் தனியே இவனொடு பொருதமை குறித்ததாம். மன்னர் மன்னெயில்கதுவும் மதனுடை நோன்றாள் - பகைமன்னர் நிலைத்த அரண்களை யிடிக்குஞ் செருக்குடைய வலிய முயற்சியினையுடைய திறுஎண்மை மாத்தானை மறமொய்ம்பின் - பெரும்படையின் வலியினோடு. செங்கண்ணாற் செயிர்த்து நோக்கி செயிர்த்துச் சிவந்த கண்ணால் நோக்கி. நோக்கியநிலையிலே அன் குறும்பு செய்த புன்பொதுவர் வழியுடன் பொன்றாகிற்கவும். 281-85 இருங்கோவேண்மான் தன் குலத்தொடு சாயாமிற்க வும் இவ்வாறு நாட்டின் புறத்தும் நாட்டின் அகத்தும் பகையில்லை யாகச் செய்தவளவில் எ-று. "செருவேட்டுச் சிவக்குஞ் செங்கணாடவர் என அகத்தினும் (157) வந்தது. இயல்பாகச் சிவந்த கண்ணாற் தாணப்பட்டார்க்கு வெகுளிக் குறிப்புத்தோன்ற நோக்கி. புன் பொதுவர் என்றார் புல்லினத்தாயர் ஆதலான். இனிப்பொதுவர் நூல்வழிபொன்ற என்றியைத்து ஆயர்புன்னெறி கெடவென்று பொருள்கூறி அவரவர் கருதிய நன்னெறியிற் செல்ல எனக்கொள்