97 மறைதற்குரிய சூட்டு. இதைக் குருவித் தலையென்பர். அச்சூட்டுத் தோறும் எய்தற்குரிய அம்புக் கட்டுகளை நிறுவி யென்க. புதை- அம்புக்கட்டு. பொருவேம் எனப் பெயர் கொடுத்து - விசி பிணி முழவின் வேந்தர் முன்னே இவனொடு பொரக் கடவோம் என்று பொருதற்கொத்த வீரப் பெயரைத் தாமே தமக்குக் கொடுத்துக் கொண்டு.பெயர் - வஞ்சினத்திற்றமக்குக் கூறும் பெயரென்ப. அங் ஙனங் கூறியதற்கேற்ப ஒருவேமெனப் புறக்கொடாது - உயிர் போமளவும் போர்முனையினின்று நீங்கோம் என்று சொல்லிப் புறக்கொடை தராதிருந்து. இனிக்கொடுத்த பெயர் புறக்கொடாது என்னினு மமையும். மதுரைக்காஞ்சியுள் பெயர் புறக்கொடாது என வருதலானறிக. - 291-94. திருநிலை இய வீரத்திருநிலை இயபெருமன்னெ யில் மின்னொளியெறிப்ப -பின்னே வீரத்திருநிலைபெற்ற பெரிய தலைமையையுடைய இவ்வுறந்தையரண் ஒளியெறித்தலால் மறமன் னெயில் (புறம் 40) எனப்பட்டது. தம்மொளிமழுங்கி எ-று. விசிபிணி முழவின் வேந்தர் - விசித்துப் பிணித்த முரசினையுடைய வேந்தர். முரசு பெருவேந்தர்க்குச் சிறந்தது. 'முரசு கெழுதாயத்தரசோ தஞ்சம் (புறம் 73) என வரு "முரசுடைச் செல்வர்" (நாலடி) முரசு கொண்டு (பதிற்) தலானறிக. இவன் பிணியகத் திருந்ததற்கு முன்னே வேந்தர் பெயர் கொடுத்துப் புறக்கொடாதிருந்து இவன் வெளிப்போந்த பின்னே இவன் மன்னெயில் ஒளி யெறிப்பக் கண்ட அளவே, தம் ஒளி மழுங் கித் தாம் சூடிய பசுமணியை இவன் கழலிற் சேர்த்திய காலினையும் என்க. பசுமணி - மரகத மணி. வேந்தர் தம்முடியை அகற்றிச் சூடிய மணி பொருத கழற்கால் என்பதும் பொருந்தும், வேந்தர் மழுங்கிச் சூடிய மணியைப் பொருதகழல் என்க. பொருதல் - இசைத் தல், சேர்த்தல். இவனை நீயே, பிறரோம் புற்றமன்னெயி லோம்பாது கடந்தட் டவர்முடி புனைந்த
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/112
Appearance