உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பசும்பொன் னி னடிபொலியக் கழறைஇய வல்லாளனை வயவேந்தே" (புறம்) எனப் பாடுதலான் இதற்கேற்பக் கூறுவதே ஈண்டுப் பெரிதும் பொருந்துமென் றுணர்க. 295-301 பொற்றொடிப் புதல்வர் ஓடி விளையாடவும் மகளிர் முலை திளைப்பவும் செஞ்சாந்து சிதைந்த மார்பினையும் அரிமா அன்ன அணங்குடைத்துப்பினையும் உடைய திருமா வளவன் என்க. கழற் காற் கேற்பத் துப்பும் (வலியும்), மகளிர் முலை திளைத்தற் கேற்பப் புதல்வர்ப் பேறும் தோன்றக் கூறினார். இவற்றாற் பொருளு மின்ப முங் கூறி மேல் அவன் கோலினுந் தண்ணிய என்பதனால் அறங் கூறினாரென வுணர்க. "அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல் (பொருநாறு 230) என்றார் பிறரும் திருமாவளவன் - திருமகள் நிலைபெற்ற மாவளவன்.எ-று. 'கொடி நுடங்கியானை நெடுமாவளவன்" (புறம்.228) என இவன் பாடப் படுதலான் இவன் பெயர் அறிக. ஈண்டுக் கூறியபடியே, "பிறங்கு நிலை மாடத் துறந்தையோனே "பொருநர்க் கோக்கிய வேலன் (புறம். 69) எனப் புறப்பாட்டினும் இவன் பாடப்படுதல் காண்க. கெஞ்சே நீ செல்ல நினைந்த கானங்கள் வேலினும் வெய்ய வாயின. இவள் தடமென் றோள்கள் அவன் கோலினுந் தண்ணியவாயின. ஆதலாற் றிருமாவளவன் பட்டினம்பெறினும் வாரேன் வாழியான்க. இதன்கட் கூறப்பட்ட கிளவித் தலைவன் இத்திருமாவளவன் கோலின்கீழ் வாழ்ந்து அதன் நுட்பத்தைத் துய்ப்பவன்ஆகம் இத லறியலாம். இவன், அவன் கோலின் தட்பத்தினும் மிகுந்துக் கலைவி யின் றோளின் தட்பத்தைக் கூறுவது அவன் கோல் அதன்கீழ் வாழ் வார் பலர்க்கும் பொதுப்படத் தட்பஞ் செய்தலும், இவள் தோள் இத்தலைவற்கே சிறந்து தட்பஞ் செய்தலும் நோக்கி யென்று நிலை