99 கத்தகும். தோளின் தட்பம் அவள் இவனை அணைத்தலான் அறியப் பட்டதாமென்க. இனிக் கோல் தன்கண் அடங்கினார்க்குத் தட்பஞ் செய்து புலந்தார்க்குத் தட்பஞ் செய்யாமையான், அணைந்தாலும் புலந்தாலுந் தட்பஞ் செய்யும் தலைவிதோளினை மிகுத்துக் கூறினார் எனினு மமையும். இவ்வுண்மையை, "மழைதுளி மறந்த வங்குடிச் சீறூர்ச் சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனை புயலென வொலிவருந் தாழிருங் கூந்தற் செறிதொடி முன்கை நங்காதலி யறிவஞர் நோக்கமும் புலவியு நினைந்தே (அகம்.225) வணங் எனவரும் அகப்பாட்டடிகளானறிக. அவன் பகைவர்க் கோக்கிய வேலினும் வெய்யகானம் என்றது ஓடினாரையும் கீழ்வீழ்ந்து கினாரையும் அவன் வேல் வருத்தாதாகவும் கானம் அவரையும் மிக வருத்தும் இயல்புபற்றியென்று துணிக. மற்றிவ்வுவமைகளுள்ளே, "கோலினுந் தண்ணிய தடமென்றோளே என்றதனாற் றலைவி தோளையே மிகுத்துக்கூறி தாம் எடுத்துக் கொண்ட இப்பட்டினப்பாலைப் பாட்டுத் தலைவன் கோலினைத் தணித்துக் கூறினாராலெனிற் கூறுவேன். இவ்வாசிரியர் கிளவித் தலைவன் வாயில் வைத்துக்கூறியது இப்பாட்டுடைத்தலைவன் கோல் தட்பமேயுடைய தென்பதாம். "உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங்காலை' (தொல். உவமவியல்) என்ற விதியால் உயர்ந்ததாகிய கோலினையே தலைவி தோட்கு உவ 'மங்கொண்டானென்று கூறினார். மற்று அவ்வுயர்ந்த கோலினுந் தண்ணியதோள் என்றதனால் தலைவிதோளை மிகுத்துக் கூறியது எல்லாவுயிர்க்கும் பொதுமைத்தாகிய இவ்வுலகத்தின் காமவின்பத் தின் சிறப்பினை உணர்த்தவேண்டி என்க. வள்ளுவனாரும், "தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு"
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/114
Appearance